தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.

(கொலோசெயர் 3 : 15)

வரலாறு

பரமானந்தபுரம் திருச்சபை வரலாறு

1966 –ம் ஆண்டு ஜீன் மாதம் 4 ஆம் நாள் கருங்கலுக்கு அருகாமையில் பண்டாரவிளை ஊரில், பஞ்சமுலட்டிவிளையில், CSI பாலுர் திருச்சபையில் (1931-1941) செயலராக இருந்த திரு. அருளானந்தம் யாக்கோபு மற்றும் 1949 முதல் 1965 வரை செயலராக இருந்த திரு. D. தேவகடாட்சம் ஆகியோரின் குடும்பம் மற்றும் பாலுர் சபையின் உறுப்பினர்களாக இருந்த இப்பகுதி மக்கள் சேர்ந்து தங்கள் ஊரில் ஆலயம் நிறுவவேண்டும் என தீர்மானித்து, பஞ்சலெட்டிவிளையில்

  • திரு. அருளானந்தம் அவர்கள் பிள்ளைகள்
  • திரு. அருளானந்தம் யாக்கோபு
  • திரு. வேதநாயகம்
  • திரு. தாவீது

என்பவர்களுக்கு சொந்தமான நிலத்தில் திரு. தேவகடாடசம் தலைமையில், திரு. J. செல்லையா, திரு. J. ராஜையன், திரு. M. சுந்தரதாஸ், திரு.வே.தாசையன் ஆகியோரும் அவர்கள் குடும்ப அங்கத்தினர்களும் சேர்ந்து, ஓர் ஓலை கூரையிலான ஆலயத்தை உருவாக்கி, ஓய்வு பெற்ற சபை ஊழியர் திரு. ஏசுதாஸ், மானான்விளை அவர்கள் ஜெபத்துடன் முதல் ஆராதனை தொடங்கப்பட்டது.

1967 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13 -ம் தேதி ஆலயத்திற்கு பரமானந்தபுரம் என பெயர் வைக்கப்பட்டு கருங்கல் பாஸ்ட்ரேட் சபையின் கிளைச்சபையாக அன்றைய பேராயர் Rt. Rev. IRH. ஞானதாசன் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

1969 -ம் ஆண்டு செப்டம்பர் 7 -ம் தேதி முதல் சபை கமிட்டி அங்கத்தினர்களாக திருவாளர்கள் திரு. J. செல்லையா, திரு. D. தேவகடாட்சம், திரு. M. சுந்தரதரஸ், திரு. V. தாசையன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு திறமையாக சேயல்பட்டு வந்தார்கள்.

1971 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 27 -ம் தேதி ஆலயத்திற்கு புதிய இடம் 10 ½ சென்ட் 2000 ரூபாய் 38 பைசாக்கு தற்போதைய ஆலயம் அமைந்நிருக்கும் பகுதியில் சபை நிதியிலிருந்து வாங்கப்பட்டது.

1972 -ம் ஆண்டு இரண்டாவது சபைக் கமிட்டியில் திருவாளர்கள் திரு. D. தேவகடாட்சம், திரு. J. செல்லையா, திரு. J. ராஜைய்யன், திரு. C. தேவபால், திரு. M. சுந்தரதாஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வந்தார்கள்.

அப்பொழுது தற்போதைய திருச்சபை இருக்கும் இடத்தில் 1973 -ம் ஆண்டு மே மாதம் 3 -ம் தேதி ஆலயத்திற்கு Rt. Rev. C. செல்வமணி பேராயர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, கல்லால் கட்டப்பட்ட ஒரு ஆலயம் 1979 -ம் ஆண்டு ஜனவரி 28 -ம் நாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1999 -ம் ஆண்டு வரை அவ்வாலயம் செயல்பட்டது.

01-11-1983 முதல் B கிரேடு பாஸ்ட்ரேட் சபையாகவும் 01-01-1996 முதல் A கிரேடு பாஸட்ரேட் சபையாகவும் அங்கீகாரம் பெற்றது. அப்போது Rev. E. ஸ்டேன்லி ராஜ் அவர்கள் போதகராக பணியாற்றினார்கள். 1988 -ல் ஆலயத்திற்கு அருகான 5 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, ஆயர் இல்லம் கட்டப்பட்டு 28-01-1989 -ல் அன்றைய பேராயர் Rt. Rev. G. கிறிஸ்துதாஸ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது Rev. ஜஸ்டின் தேவதாஸ் அவர்கள் போதகராகவும் திரு. C. தேவபால் செயலராகவும் இருந்தனர்.

ஆலயத்தில் இடநெருக்கடி காணப்பட்டதால் புதிய ஆலயம் கட்ட 1998-ம் ஆண்டு தீர்மபனிக்கப்பட்டு 01-02-1998 -ல் Rt. Rev. M.I. கேசரி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 29-12-1999 அன்று ஆலயம் கட்டப்பட்டு அன்றைய பேராயர் பொறுப்பிலிருந்த Moderator Commissary Rt. Rev. D. ஜேம்ஸ் பறினிவாசன் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. Rev. ஜேக்கப் றோஸ்மணி அவர்கள் போதகராக செயல்பட்டார்கள். திரு. D. ஐசக் டேவிட்ஸன் சபை செயலராக இருந்தார்கள்.

கல்லறைத் தோட்டத்துக்கு 27 சென்ட் நிலம் Rev. சேம் கிறிஸ்டோபர் அவர்கள் காலத்தில் வாங்கப்பட்டது. திருச்சபைக்காக கம்யூனிற்றி ஹால், Rev. ஜாண் A ஸ்மித் காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

Rev. S. சேம் விக்டர் காலத்தில் ஆலய வளாகம் மற்றும் காம்பவுன்ட் புனரமைக்கப்பட்டது. மேலும் சபையில் 50 -வது ஆண்டுவிழாவின் போது தற்போதைய ஆயர் இல்லம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தற்போது திருச்சபையின் சார்பில் DMPB வழியாக சின்னசேலம், பெத்தாசமுத்திரம் கிராமத்தில் ஊழியம் செய்ய 13 சென்ட் நிலம் 27-01-2023 அன்று வாங்கப்பட்டது.

சபையின் போதகராக Rev. ஞா. ராபர்ட் ஞான சிங் அவர்கள் செயல்படுகிறார்கள். சபைச்செயலராக Adv. D. பால் பிரைட் சிங் அவர்கள் செயல்படுகிறார்கள். சபைக்குழு உறுப்பினர்களாக Adv. D. பால் பிரைட் சிங், திரு. R. சில்பெர்ட் செல்ல துரை, திரு. N. றசல் ராஜ், திரு. D. ஐசக் டேவிட்சன், திரு. R. ஆல்பர்ட் டேனியல், திருமதி. J. புஷ்பா ஷோபனம், திருமதி. S. செல்வி ராமச்சந்திரன், திரு. T. மோகன் தாஸ், திரு. M. ரமேஷ் வர்க்கீஸ் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள்.

திருச்சபையில் திருமறைப் பள்ளி, பக்திமுயற்சி சங்கம்,பெண்கள் ஐக்கிய சங்கம், பாடகர்குழு ஆகியவை செயல்படுகின்றது.

கிளை சங்கங்கள்

ஊழியம் என்பது கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த அல்லது பரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு செயலாகும்.

வேதாகமப் பள்ளி

ஞாயிறு பள்ளி என்பது ஒரு கல்வி நிறுவனம், ஞாயிறு பள்ளி வகுப்புகள் பொதுவாக ஓய்வு நாள் ஆராதனைக்கு முன்னதாக இருக்கும். ஞாயிறு பள்ளிகள் முதன்முதலில் 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வேலை செய்யும் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக அமைக்கப்பட்டன.

பக்திமுயற்சி சங்கம்

கிறிஸ்தவ முயற்சி இயக்கம் பிப்ரவரி 2, 1881 இல் தொடங்கியது. இச்சங்கம் 1882 இல் ஒரு பத்திரிகை கட்டுரையில் விவரிக்கப்பட்ட பிறகு, ஆரம்பத்தில் அமெரிக்காவிலும் பின்னர் பிரிட்டிஷ் பேரரசு மற்றும் அதற்கடுத்த நாடுகளிலும் பரவியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த இயக்கம் உச்சத்தை அடைந்தது, பின்னர் மத இளைஞர் சங்கங்கள் கிறிஸ்தவ முயற்சியின் வடிவங்களைப் பின்பற்றி மாற்றியமைத்ததால் வீழ்ச்சியடைந்தது. இச்சங்கம் இருபத்தியோராம் நூற்றாண்டில் பல்வேறு இடங்களில் தொடர்கிறது.

பெண்கள் ஐக்கிய சங்கம்

பெண்களின் ஐக்கிய சங்கம் என்பது பெண்கள் தங்களை விசுவாசத்திலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளரவும், மற்ற பெண்களுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்ளவும், சேவை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கவும், கிறிஸ்துவுக்குள்ளாக மற்றவர்களை வாழவும் ஊக்குவிக்கும் வகையிலும் செயல்படுகிறது.

பாடகற்குழு

பாடகர் குழு என்பது பாடகர்களின் இசைக் குழுவாகும். கோரல் இசை, இதையொட்டி, அத்தகைய குழுமம் நிகழ்த்துவதற்காக குறிப்பாக எழுதப்பட்ட இசை. பாடகர்கள் கிளாசிக்கல் இசைத் தொகுப்பிலிருந்து இசையை நிகழ்த்தலாம், இது இடைக்கால சகாப்தத்திலிருந்து தற்போது வரை பரவியுள்ளது அல்லது பிரபலமான இசைத் தொகுப்பிலிருந்து. பெரும்பாலான பாடகர்கள் ஒரு நடத்துனரால் வழிநடத்தப்படுகிறார்கள், அவர் கை மற்றும் முக சைகைகளுடன் நிகழ்ச்சிகளை வழிநடத்துகிறார்.

ஆராதனை ஒழுங்குகள்

நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே. (தீத்து 1:5)

ஆராதனைகள்

அருணோதய ஆராதனை : பிரதி மாதம் முதல் நாள் காலை 5 மணி

தூயநற்கருணை ஆராதனை : மாதத்தின் முதல் ஞாயிறு

ஞாயிறு ஆராதனை : காலை 8.30 மணி

புதன் ஆராதனை : இரவு 7 மணி

வெள்ளி ஜெபக்கூடுகை : இரவு 7 மணி

சிறப்பு மாதாந்நதிர ஜெபக்கூடுகை : மாதத்தின் இரண்டாம் வெள்ளி இரவு 7 மணி

கிளை சங்கங்கள்

திருமறைப்பள்ளி : ஞாயிறு காலை 10.30 மணி

பக்திமுயற்சி சங்கம் : ஞாயிறு காலை 11.30 மணி

பெண்கள் ஐக்கிய சங்கம் : ஞாயிறு பிற்பகல் 4.00 மணி

பாடகர்குழு பயிற்சி : சனி மாலை 5 மணி

0

குடும்பங்கள்

0

ஊறுப்பினர்கள்

0

ஞானஸ்நானம்

0

உறுதிப்படுத்தல்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். (எண்ணாகமம் 6: 24-25)

அஸ்வின் ஜெஸோன் J.

புகைப்படங்கள்

  • அனைத்தும்
  • ஆலயம்
  • அடிக்கல் நாட்டுதல்
  • கிறிஸ்துமஸ்

வேதாகம வசனம்

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்;

- II கொரிந்தியர் 12 : 9

நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

- யோவான் 15 : 8

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

- I பேதுரு 2 : 3

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்;

- சங்கீதம் 115 : 12

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

- சங்கீதம் 92 : 13

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்;

- II கொரிந்தியர் 12 : 9

நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

- யோவான் 15 : 8

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

- I பேதுரு 2 : 3

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்;

- சங்கீதம் 115 : 12

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

- சங்கீதம் 92 : 13

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்;

- II கொரிந்தியர் 12 : 9

நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

- யோவான் 15 : 8

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.

- I பேதுரு 2 : 3

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்;

- சங்கீதம் 115 : 12

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.

- சங்கீதம் 92 : 13

சபைக்குழு

ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். (நீதிமொழிகள் 11 : 14)

அருட்திரு ராபர்ட் ஞான சிங் ஞா.

சபை ஆயர்

திரு. பால் பிரைட் சிங் D.

சபை செயலாளர்

திரு. றசல் ராஜ் N.

சபை பொருளாளர்

திரு. சில்பர்ட் செல்லதுரை R.

சபை கணக்காளர்

திரு. ஆல்பர்ட் டானியேல் R.

சபை உறுப்பினர் & பேராய மன்ற உறுப்பினர்

திருமதி. புஷ்பா சோபனம் J.

சபை உறுப்பினர்

திருமதி. செல்வி இராமச்சந்திரன்

சபை உறுப்பினர்

திரு. மோகனதாஸ் T.

சபை உறுப்பினர்

திரு. சுரேஷ் T.

சபை உறுப்பினர்

திரு. ரமேஷ் வர்க்கீஸ் M.

பேராய மன்ற உறுப்பினர்

நிகழ்வுகள்

ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். (மத்தேயு 18 : 20)

தொடர்புக்கு

அருட்திரு ராபர்ட் ஞான சிங் ஞா.

சபை ஆயர்

+91 9486944675

திரு. பால் பிரைட் சிங் D.

சபை செயலாளர்

+91

திரு. சில்பர்ட் செல்லதுரை R.

சபை கணக்காளர்

+91

திரு. றசல் ராஜ் N.

சபை பொருளாளர்

+91